கொங்கல் நகரம்

    அமைவிடம் - கொங்கல் நகரம்
    ஊர் - கொங்கல் நகரம்
    வட்டம் - உடுமலைப்பேட்டை
    மாவட்டம் - திருப்பூர்
    வகை - நெடுங்கல்
    கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

    விளக்கம் -

    கொங்கல் நகரம், இவ்வூர் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வஞ்சி பெருவழிச் சாலையில் 20 கி.மீ தொலைவிலும், உடுமலைப்பேட்டைக்கு வடமேற்கில் 7 கி.மீ தொலைவிலும் உள்ளது. இப்பகுதியில் வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் எச்சங்கள் அதிக அளவில் தென்படுகின்றன. மேற்பரப்பு ஆய்வில் ஏராளமான மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. முதுமக்கள் தாழி உடைந்த நிலையில் கிடைத்தது இங்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் கல் பதுக்கை, நெடுங்கல், கல்திட்டை, முதுமக்கள் தாழிகள் என அனைத்து வகையான தொல்லியல் எச்சங்கள் 300 ஏக்கர் பரப்பளவில் காணக்கிடக்கின்றன. இங்குள்ள நெடுங்கல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒளிப்படம்எடுத்தவர் - து.சுந்தரம்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்